திருத்தணி - கோயம்பேடு - திருப்பதி ஐந்து அரசு பஸ்கள் துவக்கி வைப்பு
திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, நகரி, புத்துார் வழியாக திருப்பதிக்கு, தினமும் 12 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் அதிகளவில் பயணியர் சென்று வருவதாலும், கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம், திருத்தணி - கோயம்பேடு - திருப்பதிக்கு, கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.இதன் பயனாக, நேற்று முதல் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருத்தணி - கோயம்பேடு - திருப்பதிக்கு கூடுதலாக, ஐந்து புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் துவக்க விழா, நேற்று காலை திருத்தணி பேருந்து நிலையத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், திருத்தணி பணிமனை மேலாளர் ஞானசேகரன், நேர காப்பாளர் மோகன் உள்பட போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், பயணியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.