உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் அலுவலகத்தில் கட்டட அடிக்கல் நாட்டு விழா

கலெக்டர் அலுவலகத்தில் கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருவள்ளூர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்,5 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கூட்ட அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில், மக்கள் குறைதீர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட அதிகளவிலான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் மாதந்தோறும் நடக்கின்றன.பெரிய அளவிலான கூட்ட அரங்கம் கட்ட, கலெக்டர் முன்னெடுத்து, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த கூட்ட அரங்க கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, பல்நோக்கு கூட்டரங்க கட்டுமான பணியை துவக்கி வைத்தார். புதிதாக அமையவுள்ள கூட்டரங்கு, 10,829 சதுர அடி பரப்பள வில் 530 பேர் அமரும் வகையில் அமைய உள்ளது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயகுமார், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகராட்சி தலைவர் உதயமலர் உட்படபலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ