உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் சிக்கினர்

 தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் சிக்கினர்

பொதட்டூர்பேட்டை: நவ. 19--: கரும்பு வெட்டும் தொழிலாளியை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.: பொதட்டூர்பேட்டை அடுத்த மேலப்பூடியில், ஆந்திர மாநிலம், விசாகபட்டணத்தைச் சேர்ந்த லாவாராஜி, 37, என்பவர் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு மேலப்பூடியைச் சேர்ந்த டில்லிராஜ், 25, கவிராஜ், 25, மற்றும் பெங்களூருவைச் சேரந்த சுஜித்குமார், 26, தீனதயாளன், 32, ஆகியோர், லாவாராஜிடம் தகராறில் ஈடுபட்டு, லாவாராஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த லாவாராஜி, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், டில்லிராஜ், கவிராஜ், சுஜித்குமார், தீனதயாளன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ