உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்ற நால்வர் கைது

கஞ்சா விற்ற நால்வர் கைது

பொன்னேரி: பொன்னேரியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்குபேரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பொன்னேரி தாயுமான் செட்டி தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், பொன்னேரி தேவம்மா நகரை சேர்ந்த கவுதம், 25, தேரடி பகுதியை சேர்ந்த பாரதிகண்ணா, 24, சின்னகாவணம் பகுதியை சேர்ந்த அஜய், 21, மற்றும் பெரியபாளையத்தை சேர்ந்த முத்துகுமார், 22, என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி, இங்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. பொன்னேரி போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள, 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ