உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குரூப் - 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

குரூப் - 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருவள்ளூர்:குரூப் - 2 தேர்வு முதல் நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் - 2 தேர்வுக்கு 507, குரூப் - 2ஏ தேர்வுக்கு 1,820 என, மொத்தம் 2,327 காலி பணியிடங்களுக்கு, செப்., 14ல் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், காலி பணியிடத்திற்கு, முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 9ம் தேதி முதல், திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்க உள்ளது.பயிற்சி வகுப்பு சிறந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 97897 14244, 82708 65957 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை