இளைஞர்களுக்கு இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி
திருவள்ளூர்:'தாட்கோ' வாயிலாக இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட, 'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 - 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்று மாத பயிற்சிக்கு பின், சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். பயிற்சியை பெற www.tahdco.comஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கும் விடுதி மற்றும் உணவு உள்ளிட்ட செலவினம் தாட்கோ வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.