உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில்களில் பவுர்ணமி பூஜை விமரிசை

கோவில்களில் பவுர்ணமி பூஜை விமரிசை

திருத்தணி:அம்மன் கோவில்களில் பவுர்ணமி பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடந்தது. திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன், துர்க்கையம்மன் மற்றும் காந்திநகர் திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களில், நேற்று பவுர்ணமியை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் சேவையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதேபோல், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தில், பஞ்சாட்சர மலை மீது மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு, பவுர்ணமி நாளில், 108 வில்வ அர்ச்சனையுடன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு சிவனடியார்கள் அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். ருத்ராபிஷேகம் ராசபாளையம் பாலகுருநாதீஸ்வரர் கோவிலில், நேற்று காலை ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் கலச வேள்வி நடத்தப்பட்டது. இதில், திரளான வேதவிற்பன்னர்கள் பங்கேற்றனர். புனிதநீர் கலசங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை