உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துக்க வீட்டில் தகராறு: நால்வர் மீது வழக்கு

துக்க வீட்டில் தகராறு: நால்வர் மீது வழக்கு

செவ்வாப்பேட்டை : திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 43; இவரது மனைவி வீரலட்சுமி. தமிழர் முன்னேற்ற படை தலைவராக உள்ளார்.இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில், உணவு சாப்பிட்ட இலைகளை குப்பையாக கொண்டு வந்து நேற்று மாலை 5:00 மணியளவில் கணேசன் வீட்டின் அருகே கொட்டியதில் தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசனை, கட்டையால் அடித்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், கணேசன் அளித்த புகாரையடுத்து, வெங்கடேசன், மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ