மேலும் செய்திகள்
சேதமடைந்த மின் கம்பம் மாணவ - மாணவியர் அச்சம்
26-Jan-2026
பொன்னேரி: நுாலகம் அருகே கொட்டப்படும் குப்பைகளால், வாசகர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊரட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கத்தில் அரசு தொடக்கப் பள்ளி அருகே நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்திற்கு, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள், பள்ளி மாணவ - மாணவியர் பலர் தினமும் புத்தகங்களை வாசித்து செல்கின்றனர். இந்த நுாலகத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26-Jan-2026