குப்பை கிடங்கான பயணியர் நிழற்குடை
புதுமாவிலங்கை:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுமாவிலங்கை ஊராட்சி வழியே தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பகுதிவாசிகள் பேரம்பாக்கம், திருவள்ளூர் சென்று வருகின்றனர்.இந்த ஊராட்சிக்குட்பட்ட அகரம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை குப்பை கிடங்காகவும், விளம்பரங்கள் ஓட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதிவாசிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென புதுமாவிலங்கை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.