உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேங்குது குப்பை... அடிக்குது துர்நாற்றம் ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

தேங்குது குப்பை... அடிக்குது துர்நாற்றம் ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

கனகம்மாசத்திரம்:கனகம்மாசத்திரம் காவல் நிலையம் எதிரே குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசி வருவதால், ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது கனகம்மாசத்திரம் ஊராட்சி. இங்குள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையம் எதிரே வைக்கப்பட்ட குப்பை தொட்டி பயன்பாடின்றி உடைந்து இருப்பதால், ஆங்காங்கே குப்பை சிதறி கிடக்கிறது. மேலும், பிளாஸ்டிக் குப்பை, ஹோட்டல், இறைச்சிக் கடை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், கனகம்மாசத்திரம் பகுதியில், ஆங்காங்கே மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் முகம்சுளித்தபடி செல்கின்றனர். இதன் காரணமாக, கனகம்மாசத்திரத்தின் பல இடங்களில் குப்பை கழிவுகள் நிறைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிவுகளை அகற்றி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை