காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
செங்குன்றம்:செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி, வெற்றி நகரில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புழல் பகுதியைச் சேர்ந்த சுனில், 45, என்பவர் நிர்வகித்து வருகிறார்.வடமாநில வாலிபர்கள் நான்கு பேர், அலுவலகத்திலேயே தங்கி பணி புரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சமையல் 'காஸ்' சிலிண்டர் வெடித்து, அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வாலிபர்கள் தப்பினர்.அக்கம்பக்கத்தினர் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதற்குள், அலுவலகத்தில் இருந்த கணினிகள், அட்டை பெட்டிகள், நாற்காலிகள், ஜன்னல் உள்ளிட்டவை தீக்கிரையாயின. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.