மேலும் செய்திகள்
சாலையில் பறக்கும் புழுதி பூந்தமல்லி அருகே அவதி
14-Oct-2024
பூந்தமல்லி:சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மெட்ரோ குடிநீர் எடுத்துச் செல்ல, ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் பள்ளம் தோண்டி, ராட்சத குழாய்கள் புதைக்கப்படுகின்றன.இதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத குழாய்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.மேலும், இதன் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, இவற்றை வேறு பகுதியில் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
14-Oct-2024