உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மினி லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

மினி லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

திருவாலங்காடு;மினி லாரி இருசக்கர வாகனம் மீது மோதி சிறுமி உயிரிழந்தார். பட்டரைப்பெரும்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் தருண் கிருஷ்ணன், 18. இவர் நேற்று முன்தினம், தன் உறவினர் புவனேஸ்வரி 17 என்பவருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்னை ----திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். ஆற்காடு குப்பம் உயர்மட்டப்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த மினி லாரி டூ-- - வீலர் மீது மோதியது. இதில் சாலையில் துாக்கி வீசப்பட்ட தருண் கிருஷ்ணன் மற்றும் புவனேஸ்வரி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை