உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, தாமரைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, 25. இவர், வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடு வளர்த்து வருகிறார்.கடந்த, 22ம் தேதி இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆடு ஒன்றை திருடிச் செல்லும் போது, அந்த ஆடு போட்ட சத்தத்தால், அக்கம் பக்கத்தினர் ஆடு திருடியவரை பிடித்து ஊத்துக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அவர், ஆந்திர மநிலம், கே.டி.பி.புரம் சரஸ்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 39, என, தெரியவந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை