உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அபாயம்

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அபாயம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து செல்கிறது. இதில், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கடந்த 2020ல் பெய்த கனமழையின் போது கொசஸ்தலை ஆறு தடம் மாறி அரசு பள்ளிக்குள் புகுந்தது. இதில், பள்ளியின் மூன்றடுக்கு வகுப்பறை கட்டடத்தின் வகுப்பறைகள் மண்ணில் புதைந்து சீரழிந்தன. பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து வெள்ளம் வெளியேறியது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தின் வேகத்தை சமாளிக்கும் விதமாக, கான்கிரீட் துாண்களுடன் பலமான சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விரைந்து சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ