கிராம சபை கூட்டம் 29க்கு மாற்றம்
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால், வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.அன்றைய தினம், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படும்.கிராமசபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.