மேலும் செய்திகள்
கார் விபத்தில் பள்ளி மாணவர் பலி
10-Mar-2025
மீஞ்சூர்; திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 85; மனநலம் பாதித்தவர். இவரது மகள் வழி பேரன் பத்மநாபன், 23. இவர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.சரஸ்வதி, குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையிட்டு, அடிக்கடி வீட்டை விட்டை வெளியே செல்வதும், பின், அவரை கண்டுபிடித்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று, பேரன் பத்மநாபனிடம் பாட்டி சண்டையிட்டதாக தெரிகிறது. மது போதையில் இருந்த பத்மநாபன், ஆத்திரத்தில், வீட்டில் இருந்த சுத்தியலால், சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்தார்.தகவலறிந்த மீஞ்சூர் போலீசார், சரஸ்வதியின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பத்மநாபனை கைது செய்து விசாரிக்கின்றனர்.கஞ்சா வழக்கில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட பத்மநாபன், கடந்த 5ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார்.
10-Mar-2025