மளிகை கடையில் குட்கா பறிமுதல்
திருவள்ளூர்:காக்களூர், புட்லுார் பகுதிகளில் குட்கா விற்பனை செய்வதாக, திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் காக்களூரில் உள்ள மளிகை கடையில் சோதனையிட்டபோது, 550 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, வழக்கு பதிந்த போலீசார், கடை உரிமையாளர் மகேந்திரன், 60, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.