உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி வழியாக, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து திருத்தணி போலீசார் நேற்று மேற்கண்ட சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி பையில், 8 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குட்கா கடத்தி வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா சின்ன ஏளச்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டுராஜன், 37 என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !