மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் கைது
17-Jul-2025
ஊத்துக்கோட்டை, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்தை சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் வைத்திருந்த உடைமையை சோதனை செய்தனர். அதில், 40 குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு 10,000 ரூபாய். விசாரணையில், சென்னை. கண்ணகிநகர் முருகேசன், 49, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
17-Jul-2025