உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமம் ரத்து: கலெக்டர்

குழந்தை திருமணம் நடந்தால் மண்டப உரிமம் ரத்து: கலெக்டர்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் , மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். போதை பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க, காவல் துறை வாயிலாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிறுமியர் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பதிவு பெற்ற குழந்தை இல்லங்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும், இல்லங்களில் விளையாட்டு போட்டி நடத்தியும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 10 பேரை சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருமண மண்டபங்களில், 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்வது உறுதி செய்யப்பட்டால், மண்டபத்தின் உரிமம் ரத்து செய்து, 'சீல்' வைக்கப்படும். செங்கல் சூளைகளில் காவல் துறையினருடன் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, பேரூராட்சி உதவி இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி