உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்

ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்

ஆவடி,:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்களில், பயணியரிடமிருந்து மொபைல் போன், நகை உள்ளிட்ட பொருட்களை, லாவகமாக திருடுவோரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.போலீசாரின் தேடுதல் வேட்டையில், வியாசர்பாடி கருணாநிதி சாலையைச் சேர்ந்த ரகுமான், 28; கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்த லுக்மனுால் ஹக்கீம், 26; அதே பகுதி, மேட்டுத் தெருவைச் சேர்ந்த கார்த்தி, 28, ஆகிய மூவர் சிக்கினர். அவர்களை கைது செய்து 3 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை