உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பன்றிகளால் சுகாதார சீர்கேடு

பன்றிகளால் சுகாதார சீர்கேடு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் மேய்ச்சலுக்காக கலைஞர் நகர், அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெரு, திருவாலங்காடு ரயில் நிலைய சாலைகளில் சுற்றி திரிகின்றன.பன்றிகள் வீடுகள் அருகே பன்றிகள் முகாமிடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு அருகில் உள்ள வீட்டில் வசிப்போருக்கு விஷ காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.எனவே ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை