உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை மீட்பு நடவடிக்கைகள் தயார் நிலை

கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை மீட்பு நடவடிக்கைகள் தயார் நிலை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதகாலை வரை, 10 செ.மீ., மழை பதிவாகியது. நேற்று காலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமையில், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று அவசர கூட்டம் நடத்தப்பட்டது. வருவாய், உள்ளாட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் ஆய்வு மேற்கொண்டு முன் ஏற்பாடுகளை கேட்டறிந்தார். தலையாரிபாளையம், வல்லம்பேடுகுப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள பங்நோக்கு பேரிடர் மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. சுண்ணாம்புகுளம் கிராமத்தில் 250 பேர், பெதிப்பாளையம் கிராமத்தில் 450 பேர், அரியதுறை கிராமத்தில் 90 பேர் தற்காலிகமாக தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வந்தது. நேற்று மாலை முதல் அதிகம் பேர் தங்கத் துவங்கினர்.மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆரணி ஆறு மற்றும் அதன் கரையோர பகுதிகளை நீர்வளத்துறையினர் தீவரமாக கண்காணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தில், பேரிடம் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். அதேபோன்று மாவட்ட எஸ்.பி.,யின் சிறப்பு பேரிடர் மீட்பு குழுவினர், எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மீட்பு தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்காதபடி உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !