உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்

சாலையோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்

திருவாலங்காடு,கனகம்மாசத்திரம் சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.கனகம்மாசத்திரம் பஜார் சாலையில், அரசு பேருந்து உட்பட 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, காவல் நிலையம் - பனப்பாக்கம் பிரிவு வரையுள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகிஉள்ளது.இச்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அடிக்கடி விபத்து நடக்கிறது.நேற்று பஜார் பகுதியில், இரண்டு பேருந்துகள் எதிரெதிரே வந்த நிலையில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களால் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே நிலை தொடர்வதால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'கனகம்மாசத்திரம் போலீசார் ஆய்வு செய்து, வாகனங்கள் நிறுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை