உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்

போக்குவரத்து துறை அலுவலகத்தால் கும்மிடிபூண்டியில் கடும் நெரிசல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.அங்கு, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த புதிய வாகனங்களின் பதிவு, வாகன தகுதி சான்று உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பதிவுக்கு வரும் புதிய இருசக்கரம் மற்றும் கார்களை நிறுத்த இடவசதி இல்லாததால், அனைத்து வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.அதேபோல், தகுதி சான்று பெற வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. மோட்டார் வாகன ஆய்வாளர், அங்கு நிறுத்தப்படும் நுாற்றுக்கணக்கான வாகனங்களின் இன்ஜின் எண் ஆகியவற்றை சரிபார்த்து முடிக்கும் வரை, அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன.இதனால், இச்சாலையில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைவில், போக்குவரத்து அலுவலகத்திற்கு, கும்மிடிப்பூண்டியில் தனி இடம் ஒதுக்கி, சொந்த கட்டடத்தில் போதிய இடவசதியுடன் இயக்க வேண்டும்.அதுவரை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, மாற்று இடத்தில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ