வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Very good news Why late madavaram rountana to padiyanallur tool gate bridge Its over drafig areya
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - கொல்கட்டா, சென்னை - திருப்பதி, காரனோடை - சத்தியவேடு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றை தவிர, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில், 445 கி.மீ., துார சாலைகள் உள்ளன.மாவட்டத்தில், திருமழிசை - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - செங்குன்றம், திருவள்ளூர் - கடம்பத்துார் - சுங்குவார்சத்திரம், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் - திருவாலங்காடு - அரக்கோணம் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், அப்பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள், மக்கள்தொகை மற்றும் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அதிக போக்குவரத்து உள்ள ஒரு வழிச்சாலைகள் இரு வழிச்சாலையாகவும், இரு வழிச்சாலைகள், நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை உட்பட நான்கு சாலைகள், 103.30 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூறியதாவது:திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், திருவள்ளூர் வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட அரசிடம் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மார்க்கத்தில், 2.6 கி.மீ.,க்கு சாலை அகலப்படுத்தும் பணி, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சித்துார் - திருத்தணி மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது.அதில், தற்போது 10 கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தும் பணி, 65 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 5 கி.மீ., துரத்திற்கு, 15 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.மேலும், கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், ஏற்கனவே 10 கி.மீ., துாரம் சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. வாணியமல்லியில் இருந்து மாதர்பாக்கம், மாநெல்லுார் வழியாக, சிப்காட்டுடன் இணைக்கும் வகையில், 2.5 கி.மீ., துாரம் வரை, 3.8 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.மேலும், தொழிற்பேட்டைக்கு கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில், சாலை அகலப்படுத்தும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Very good news Why late madavaram rountana to padiyanallur tool gate bridge Its over drafig areya