மேலும் செய்திகள்
சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் ஓடிய கழிவு நீர்
02-Nov-2024
திருவள்ளூர் : திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள உணவகத்தில் இருந்து வெளியேறிய கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.திருவள்ளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை, சி.வி.நாயுடு சாலையில் நித்யா அமிர்தம் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த உணவகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் ஓடி துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.உணவகம் கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையிலேயே விடுவதை நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:உணவகத்தினர் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கழிவு நீருடன், சமையலறை கழிவும் கலந்ததால், அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, உணவக நிர்வாகிகளிடம், சமையல் அறை கழிவிற்கு தனியாகவும், கழிப்பறைக்கு தனியாகவும் கழிவு நீர் அகற்ற வேண்டும் என கூறி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
02-Nov-2024