மேலும் செய்திகள்
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
15-Sep-2025
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கவரைப்பேட்டை அருகே ஏரிப்பேட்டையில் வசித்து வருபவர் ஜாஹிர்கான், 32. கடந்த 20ம் தேதி குடும்பத்துடன், ஆந்திர மாநிலம் கொசம்பூர் தர்கா சென்றிருந்தார். நேற்று முன்தனம் இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 சவரன் மற்றும் 'டிவி' திருடு போனது தெரியவந்தது. அதேபோல், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் அமீதா, 60, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 1 சவரன் மற்றும் 10,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15-Sep-2025