மேலும் செய்திகள்
மனிதநேய வார நிறைவு விழா
31-Jan-2025
திருவள்ளூர்:மனித நேய வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற, 108 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா நேற்று நடந்தது.உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவியர், 108 பேருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர்கள் மதியழகன், செந்தில்குமார், கண்காணிப்பாளர் இளவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Jan-2025