உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நாய்கள் தொல்லை அதிகரிப்பு: ஆர்.கே.பேட்டை மக்கள் பீதி

 நாய்கள் தொல்லை அதிகரிப்பு: ஆர்.கே.பேட்டை மக்கள் பீதி

ஆர்.கே.பேட்டை: தெருவில் சுற்றித்திரியும் நாய்கள், திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்து பகுதி மக்களை கடிக்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆர்.கே. பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை, அப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கின்றன. இதனால், தினசரி நாய்க்கடியால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆர்.கே.பேட்டை வட்டார அரசு மருத்துவமனைக்கு, தினசரி 10க்கும் மேற்பட்டோர் நாய்க்கடி பாதிப்பால் வருகின்றனர். இதில், முதல் தடுப்பூசி முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களும் அடங்குவர். இரண்டு மாதங்களுக்கு முன், ஆர்.கே.பேட்டை அடுத்த கே.பி.என்.கண்டிகையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தெருநாய் கடித்ததால் பலியானார். சாலையோர இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவு கடைகளில் இருந்து வீசப்படும் இறைச்சி கழிவுகளை தேடி, நாய்கள் ஊருக்குள் அதிகளவில் சுற்றித்திரிவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சாலையோர இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவு கடைகளை பாதுகாப்பான கட்டடங்களில் நடத்தவும், இறைச்சி கழிவுகளை முறையாக அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை