உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்

இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்

மீஞ்சூர்: இந்தியன் ஆயில் எரிவாயு முனையத்தின் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையம் உள்ளது. இங்கிருந்து, எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 'பாட்டலிங் பாயிண்ட்' எனபடும் சிலிண்டரில் நிரப்பும் ஆலைகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த எரிவாயு முனையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள், இரண்டாவது நாளான நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை