உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொங்கல் பரிசுடன் மண் பானை வழங்க தொழில் சங்கம் மனு

பொங்கல் பரிசுடன் மண் பானை வழங்க தொழில் சங்கம் மனு

திருவள்ளூர்: பொங்கல் பரிசுடன் மண் பானை, அடுப்பு வழங்க வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்துள்ள மனு: தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக, அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. இதனால், விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. பொங்கல் தினத்திற்கு முக்கிய தேவையாக, மண்பானை மற்றும் அடுப்பை, தமிழர்கள் பயன்படுத்தி பொங்கல் சமைக்கின்றனர். எனவே, தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன், மண்பானை மற்றும் அடுப்பை வழங்க வேண்டும். இதனால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இதுகுறித்து, தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். தற்போது, திருவள்ளூர் கலெக்டரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ