உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்தேக்கத்துக்கு 1,240 கன அடிநீர் வரத்து

பூண்டி நீர்தேக்கத்துக்கு 1,240 கன அடிநீர் வரத்து

ஊத்துக்கோட்டை:வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மூன்று தினங்களாக பலத்த மழை பெய்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 840 கன அடி மற்றும் மழைநீர் 600 கன அடி என 1,240 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி நீர்க்தேக்கத்தின் கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.616 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 35 அடியில், 23.30 அடி நீர் உள்ளது. இணைப்பு கால்வாய் வாயிலாக செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை