உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறப்பு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

சிறப்பு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

திருவள்ளூர்:சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக, கோவை, நாகர்கோவில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 10 ரயில்கள் மட்டுமே தற்போது திருவள்ளூரில் நின்று செல்கிறது. கோவை, பிருந்தாவன் உள்ளிட்ட, 9 விரைவு ரயில்களை திருவள்ளூரில் நிறுத்த கோரி கடந்த 40 ஆண்டுகளாக ரயில் பயணியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.இந்நிலையில், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலத்தில் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களை திருவள்ளூரில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் சங்கத்தினர் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை