ஆயில் மில் - ரயில் நிலையம் வரை மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 27 வார்டுகளில், 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், 5,500க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இதன் வாயிலாக, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நகரின் பிரதான சாலையான ஜே.என்.சாலை, காமராஜர் சிலை சந்திப்பு, எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம் டோல்கேட், தேரடி உட்பட, 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில், சாதாரண பல்புகள் அனைத்தும், கடந்த சில மாதங்களுக்கு முன் எல்.இ.டி., சி.எப்.எல்., விளக்குகளாக மாற்றப்பட்டன.மேலும், பெரியகுப்பம் மேம்பாலத்தில் இருந்து ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு வரை, புதிதாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, சி.எப்.எல்., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள பகுதிகளில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது, ஆயில் மில் சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் வரை, புதிதாக மின்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, இச்சாலை இருளில் ஜொலிக்கும் என, நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார்.