உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சிகளில் வளர்ச்சி பணி திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் வளர்ச்சி பணி திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்

திருத்தணி: ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயகுமார் அறிவுறுத்தினார். திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயகுமார் பேசியதாவது: ஊராட்சிகளில், சுகாதாரமான குடிநீர், கால்வாய் மற்றும் தெரு விளக்குகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். தற்போது, வைரஸ் காய்ச்சல் பல இடங்களில் பரவி வருவதால், துப்புரவு பணியாளர்கள் மூலம் ஊராட்சி செயலர்கள், கிராமங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய், மின்மோட்டார்கள் பழுதடைந்தால், உடனுக்குடன் சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை