உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தல்

பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தல்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், மத்திய அரசின் 'பாரத் மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ், 1,423.50 கோடி ரூபாயில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 'நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ்' மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 181 ஏக்கர் பரப்பளவில், 1,423.50 கோடி ரூபாய் மதிப்பில், 2024ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.தமிழகத்தில் முதலாவதாக அமையவுள்ள இந்த பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை நேற்று, கலெக்டர் பிரதாப் தலைமையில், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை விரைந்து முடிக்க வேண்டுமென, சென்னை துறைமுக தலைவர்சுனில்பாலிவால் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி