உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இயற்கை இடர்பாடு குறித்து முன்கூட்டியே அறிய செயலி அறிமுகம்

இயற்கை இடர்பாடு குறித்து முன்கூட்டியே அறிய செயலி அறிமுகம்

திருவள்ளூர்:இயற்கை இடர்பாடு குறித்த தகவல்களை முன்கூட்டியே பெற, பிரத்யேக செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து தங்களின் மொபைல் போனில், 'TN-ALERT' என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை வாயிலாக, பொதுமக்கள் எளிய முறையில் இயக்க கூடிய வானிலை செயலியாக TN-ALERT வடிவமைக்கப்பட்டு உள்ளது. இச்செயலி வாயிலாக, தங்கள் பகுதியில் நிலவும் வானிலை அறிக்கை, மழையளவு விவரம், செயற்கைக் கோள் புகைப்படம், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் வரைபடம்.புயல், கனமழை, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், தீ, இடி, மின்னல் போன்ற பேரிடர்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தகவல்கள்; நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட விபரம், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் ஆபத்திற்கான எச்சரிக்கை விபரம், பேரிடர் தொடர்பான புகார் அளிக்கும் வசதி, புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா உதவி எண்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை