உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உயர்கோபுர மின்விளக்கு கம்பமா... விளம்பர பேனர் வைக்கும் இடமா?

உயர்கோபுர மின்விளக்கு கம்பமா... விளம்பர பேனர் வைக்கும் இடமா?

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிபேட்டை. இந்த கிராமத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு கூட்டுச்சாலை மற்றும் கொத்தகுப்பம் வழியாக இரண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கொத்தகுப்பம் வழியாக செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தமாக ஏரிக்கரை கூட்டுச்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயணியரின் வசதிக்காக நிழற்குடையும், உயர்கோபுர மின்விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த உயர்கோபுரம் மின்விளக்கு கம்பத்தின் அருகே உள்ள நிழற்குடையை பயன்படுத்தி, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பொதட்டூர்பேட்டைக்கு சென்று வருகின்றனர்.இந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தில் பிரமாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளன. காற்றடிக்கும் போது விளம்பர பேனர் ஊசலாடுகிறது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதன் காரணமாக, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், உயிர் பயத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, உயர்கோபுர விளம்பர பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ