உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டி முடித்து 4 ஆண்டுகளாச்சு! பயன்பாட்டிற்கு விடுவது எப்போது?

கட்டி முடித்து 4 ஆண்டுகளாச்சு! பயன்பாட்டிற்கு விடுவது எப்போது?

திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 250க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்த நகரில், இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.கோடைக்காலத்தில் குடிநீர் கிடைக்காமல், தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2020 - 21ம் ஆண்டு நிதியாண்டில், ஜல் ஜீவன் திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.ஆனால், கட்டி முடித்து நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, வீடு மற்றும் தெருக்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் வசதியின்றி ஜெ.ஜெ., நகர்வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை