மேலும் செய்திகள்
தவிட்டுப்பாளையத்தில் சாயும் நிலையில் கம்பம்
26-Dec-2024
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தாராட்சி கிராமம். இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலையொட்டி, சாலையோரம் உள்ள மின்கம்பம் நட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் நிலையில் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்று, ஆறு மாதத்திற்கு முன், ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பம் அருகில் புதிய மின்கம்பம் நட்டனர். ஆனால் இணைப்பு கொடுக்கவில்லை.எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Dec-2024