உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் விடுதியில் நகை திருட்டு

தனியார் விடுதியில் நகை திருட்டு

திருத்தணி:தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வசிப்பவர் பாலாஜி பிரகாஷ், 43. இவர், நேற்று முன்தினம் சகோதரியின் மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கினார்.நேற்று மதியம் நடந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு, பாலாஜிபிரகாஷ் மீண்டும் தனியார் ஹோட்டல் அறைக்கு சென்றார். அறையில் இருந்த 4.5 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை