மேலும் செய்திகள்
போலி நகை அடகு வைத்த 2 பேர் கைது
27-Nov-2024
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அருகே, ராமாபுரம் சாலையில் வசிப்பவர் தேசம்மாள், 75; கடந்த 14ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்த போது, வீடு புகுந்த கொள்ளையன், அவர் அணிந்திருந்த, 10 சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடினான்.இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக நேற்று கிருஷ்ணாகுப்பத்தைச் சேர்ந்த அஜித்குமார், 25, என்பவரை, பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர், நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை அடித்த நகையை வங்கியில் அடகு வைத்ததும் தெரியவந்துள்ளது. அஜித்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
27-Nov-2024