உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேலை வாய்ப்பு முகாம் 437 பேர் பணி நியமனம்

வேலை வாய்ப்பு முகாம் 437 பேர் பணி நியமனம்

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொன்னேரி அரசு கல்லூரியில் நேற்று தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த முகாமில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். முகாமில், 155 நிறுவனங்கள் பங்கேற்றனர். மொத்தம், 3,059 பேர் விண்ணப்பித்த நிலையில், முதல்கட்டமாக, 193 ஆண்கள், 244 பெண்கள், 23 மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம், 437 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.மேலும், இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுக்கு, 298 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி