உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

மணவாளநகர்:மணவாளநகரில் உள்ள கே.ஈ.என்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் கே.ஈ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் அரங்கம் திறப்பு விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சா.ஞானசேகரன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் மணவாளநகர் வணிகர் சங்க பங்களிப்புடன் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காமராஜர் அரங்கத்தை வணிகர் சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி திறந்து வைத்தார். மாணவர்களிடையே நடந்த காமராஜர் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி உதவி தலைமையாசிரியர் சரளா நன்றி கூறினார்.திருத்தணி அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, தளபதி கே. விநாயகம் மேல்நிலைப் பள்ளி, சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காமராஜர் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.திருத்தணி அடுத்த மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின், பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி நிர்வாகம் மற்றும் திருத்தணி ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காமராஜரின், 123 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில், 123 மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !