உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துாரில் ரயிலில் அடிபட்டு கர்நாடகா சிறுவன் உயிரிழப்பு

கடம்பத்துாரில் ரயிலில் அடிபட்டு கர்நாடகா சிறுவன் உயிரிழப்பு

கடம்பத்துார்: கடம்பத்துாரில் நேற்று முன்தினம் இரவு, கடவுப்பாதையை கடக்க முயன்ற கர்நாடக மாநில சிறுவன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம், கொடியாலா, விநாயக நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் ரவி நாயக், 17; பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, நவீன் ரவி நாயக், கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே உள்ள கடவுப்பாதையை கடக்கும் போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில் மோதியது. தகவல் அறிந்து இரவு 11:00 மணிக்கு வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு, ரயில்வே போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதே சிறுவன் உயிரிழந்ததற்கு காரணம் என, கடம்பத்துார் மக்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை