மேலும் செய்திகள்
அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்
16-Oct-2025
பூந்தமல்லி: பெங்களூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து, சாலை தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து சென்னைக்கு, கர்நாடக மாநில அரசு பேருந்து பயணியருடன் நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு புறப்பட்டது. பெங்களூரை சேர்ந்த தேவராஜ், 46, என்பவர் பேருந்தை ஓட்டினார். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி பகுதியை, நேற்று காலை 5:45 மணிக்கு பேருந்து கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகி, சாலையில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி சேதமானது. ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த ஒன்பது பயணியர், லேசான காயம் அடைந்தனர். இவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2025