உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.3 லட்சம் வலையை சேதப்படுத்தி காசிமேடு மீனவர்கள் மீது தாக்குதல் நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் அராஜகம்

ரூ.3 லட்சம் வலையை சேதப்படுத்தி காசிமேடு மீனவர்கள் மீது தாக்குதல் நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் அராஜகம்

காசிமேடு, நடுக்கடலில், காசிமேடு மீனவர்களின் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தியதுடன் மீனவர்களை தாக்கி, காரைக்கால் மீனவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் சுரேஷ், 42, எர்ணாவூர், பெரியகுப்பத்தைச் சேர்ந்த சுந்தரம், 41, இன்பரசன், 36, ஜெகதீஷ், 37, செல்வமணி, 50, ஆகியோர், விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில், காசிமேடில் இருந்து வடக்கே 8.500 நாட்டிகல் மைல் துாரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரைக்கால் மீனவரின் விசைப் படகு, காசிமேடு மீனவர் சுரேஷின் படகில் மோதியது. இதில் மீன் வலை அறுந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.மேலும், மோதல் குறித்து காரைக்கால் மீனவர்கள் ஒயர்லஸ் மூலம் அளித்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 5க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வந்த காரைக்கால் மீனவர்கள், காசிமேடு மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகளை எடுத்து சென்றனர்.இது குறித்து மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். இத்தாக்குதலில் மீனவர்களின் உடைமைகளான வலை, நங்கூரம் என, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி